ராக் ஸ்டார் அனிக்கு HBD!!

தமிழ் சினிமாவின் இளமை துள்ளும் இசையமைப்பாளர், பாடகர் அனிருத் ரவிசந்தர்.

Instagram - Anirudh

மிக சிறிய வயதிலேயே வெற்றியை எட்டி பிடித்தவர், இளைஞர்களின் பல்ஸ் பிடித்து மியூசிக் போடும் கம்போசர் இவர்.

ஐஸ்வர்யா இயக்கும் குறும் படங்களுக்கும், தன் நண்பர்கள் இயக்கும் குறும்படங்களுக்கும் இசை அமைத்து வந்தார் அனிருத்.

ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராக் அறிமுகமானார்.

வெகு நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்தமாக ஒரு ஆல்பம் ஹிட் மற்றும் படத்தின் மயக்கும் பின்னனி இசையும் ஹிட் அடித்தது.

தனது முதல் வெற்றியை தொடர்ந்து, எதிர் நீச்சல் திரைப்படத்திற்கு இசை அமைத்தார் அனிருத்.

தொடர்ந்து வணக்கம் சென்னை, மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி என வரிசையாக வெளியான அனைத்து படத்தின் பாடல்களுமே தெறி ஹிட்.

தொடர் வெற்றிகளுக்கு பிறகு பெரிய ஹீரோக்களின் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அன்று முதல் இன்று வரை இசையில் பட்டைய கிளப்பி வரும் அனிருத்துக்கு ஹாப்பி பர்த்டே.