ஆண்கள் பண்ணலாம், நாங்க பண்ணக் கூடாதா? நடிகை ஓபன் டாக்!

தன்னை விட வயது குறைவான இளம் நடிகரை திருமணம் செய்து கொள்வது குறித்த சர்ச்சைக்கு மலைக்கா பதில்!

Instagram

இந்தியில் பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் மலைக்கா அரோரா. பல இந்தி படங்களில் நடித்துள்ள இவர் ‘உயிரே’ படத்தில் வரும் ‘தையா.. தையா’ பாடலுக்கும் நடனமாடி உள்ளார்.

இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை 1998ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் ‘அர்ஹான் கான்’ என்ற மகனும் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அர்பாஸ் கானை மலைக்கா அரோரா விவாகரத்து செய்தார்.தற்போது பாலிவுட்டின் இளம் நடிகரான அர்ஜுன் கபூருக்கும், மலைக்கா அரோராவுக்கும் இடையே காதல் உண்டாகியுள்ளது.

’வலிமை’ பட தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகன்தான் இந்த அர்ஜுன் கபூர்.

மலைக்கா அரோராவுக்கு 49 வயதாகும் நிலையில் 37 வயதாகும் அர்ஜூன் கபூரை அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதை சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

Instagram

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மலைக்கா அரோரா “ஆண்கள் எத்தனை விவாகரத்து செய்தாலும், திருமணம் செய்தாலும் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள்..”

Instagram

“ஆனால் ஒரு பெண் விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்தால் கீழ்த்தரமாக பார்க்கிறார்கள். தினமும் என்னைப்பற்றி வலைதளங்களில் அவதூறாக பேசுகிறார்கள்..”

Instagram

“ஆனா அதையெல்லாம் நான் கடந்து சென்று விடுகிறேன். விவகரத்தான பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.