ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் வாழ்த்து

ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் வாழ்த்து


K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 20 மே 2016 (12:04 IST)
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
 
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா 39 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.
 
அவருக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
 
இந்த நிலையில், யாரும் எதிர்பாரத வகையில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அரசியலில் ப.சிதம்பரமும், முதல்வர் ஜெயலலிதாவும் இந்த நிமிடம் வரை பரம எதிரிகள் ஆவார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 


இதில் மேலும் படிக்கவும் :