கல்லணை!

webdunia photoWD
முற்கால சோழப் பேரரசர் கரிகாலன், சற்றேறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லணை, நெற்களஞ்சியமாம் தஞ்சைத் தரணியின் வளத்திற்கு இன்றளவும் ஆதாரமாகத் திகழ்கிறது.

காவிரி நதியின் குறுக்கே 1080 அடி நீளத்திற்கும், 60 அகலத்திற்கும் பெரும் பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கல்லணை (கல்+அணை), உலகில் கட்டப்பட்ட முதல் அணை எனும் பெருமையைப் பெற்றதாகும்.

காவிரி நதியின் குறுக்கே கல்லணையைக் கட்டியதன் மூலம், அந்நதியின் நீரின் ஒரு பகுதியை பாசனத்திற்கு நீரின்றி வறண்ட தஞ்சை பெரும்பகுதிகளுக்கு கொண்டு சென்றுள்ளார் பேரரசர் கரிகாலன். இதனாலேயே இவருடைய பெயருக்குப் பின்னால் ஒரு பெருமை அடைமொழியாக ‘பெருவளத்தார’ என்று சேர்ந்து இவர் கரிகால் பெருவளத்தான் என்றே வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளார்.

காலத்தால் முதன்மையானது என்பது மட்டுமின்றி, கல்லணையின் பெருமைக்கு மற்றொரு பெரிய காரணம், அதனைக் கட்ட கையாண்ட முறையாகும்.

Webdunia|
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்க
என்ற பாரதிதாசனின் பாடலிற்கு அடிப்படையாகவும், தமிழரின் வாழ்வியல் மேன்மைக்கு ஆதாரமாகவும், கட்டுமானக் கலைக்கு ஒரு பாரம்பரிய சான்றாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது கல்லணை.
webdunia photoWD
இன்றுபோ‌தொழில்நுட்பச் சாதனங்களும், கருவிகளும் அறியப்படாத அக்காலத்தில், பெரும் பாறைகளைக் கொண்டுவந்து, காவிரி ஆற்றின் ஒரு கரையிலிருந்து அவைகளை ஆற்றிற்குள் உருட்டிவிட்டு, உருண்டு சென்று ஆற்றுக்குள் அமிழ்ந்துபோன பாறைகளின் மீது மேலும் பாறைகளை உருட்டி, ஆற்றின் நீரோட்டத்தின் அளவிற்கும் அதிகமான உயரத்திற்கு ஒரு தடையை ஏற்படுத்தி, அதனையே பாதையாக்கி, ஆற்றின் மறுகரை வரை பாறைகளை உருட்டி நிரவியே கல்லணை கட்டப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :