திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:07 IST)

யோகி பாபுவின் மண்டேலா படம் மறு தணிக்கையா?

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படம் தேர்தல் நேரத்தில் மிகச் சரியாக வெளியானதால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 
 
இந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் விதமான காட்சிகள் இடம்பெற்று உள்ளதாகவும் அதனால் தங்களது சமுதாய மக்களை புண்படுத்தி இருப்பதாகவும் இதனால் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
மண்டேலா படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனத்தை நீக்க வேண்டும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது, இதனை அடுத்து இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன