திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (21:37 IST)

பிக்பாஸ் 2: முதல் வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் எலிமினேட் என்ற முறையில் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். எலிமினேட் செய்யப்படுபவர்களை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களே தேர்வு செய்வார்கள். இருப்பினும் பார்வையாளர்கள் அளிக்கும் ஓட்டுக்கள் அடிப்படையில் குறைந்த ஓட்டுக்கள் பெற்றவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
 

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர்களை நேற்று போட்டியாளர்கள் தேர்வு பெற்றனர். இதில் அனந்து, மும்தாஜ், ரித்விகா மற்றும் நித்யா ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மும்தாஜ் நாட்டாமை போக்கில் நடந்து கொள்வதாகவும், அனந்துவுக்கு இந்த இடம் செட் ஆவது போல் தெரியவில்லை என்பதற்காகவும், ரித்விகா யாரிடமும் ஒட்டாமல் இருப்பதற்காகவும், நித்யா எந்த வேலையும் செய்யாமல் இருப்பதற்காகவும் எலிமினேட் லிஸ்ட்டில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் இந்த வாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த உண்மை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பதால் அனைவரும் த்ரில்லில் உள்ளனர்.