ஆந்திராவில் திறந்துட்டாங்க… தமிழ்நாட்டுல எப்போ? தயாரிப்பாளர்கள் எதிர்பார்ப்பு!

Last Modified செவ்வாய், 6 ஜூலை 2021 (15:35 IST)

அண்டை மாநிலமான ஆந்திராவில் திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அமலாக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் 3 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து இப்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளோடு திரையரங்குகள் திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றன. அந்த வகையில் ஆந்திராவில் ஜூலை 8 முதல் திரையரங்குகளை 50 சதவீத இருக்கைகளோடு திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. கிட்டத்தட்ட ஆந்திராவுக்கும் சமமான எண்ணிகையில்தான் தமிகத்திலும் உள்ளது என்பதால் இங்கும் திறப்புக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :