இப்போதாவது சமந்தாவுக்கு கல்யாணம் நடக்குமா?
சமந்தா, நாக சைதன்யாவின் திருமணம், வருகிற அக்டோபர் மாதம் நடக்கலாம் என அக்கட தேசத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காதலர்களான நாக சைதன்யா, சமந்தா இருவருக்கும், கடந்த ஜனவரி மாத இறுதியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமந்தா கையில் வைத்துள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.
இவர்கள் திருமணம் எப்போ என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.