செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (17:36 IST)

இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த பட கதாநாயகன் இவர்தான்!

இயக்குனர் விஷ்ணுவர்தன் அடுத்த உப்பேன்னா பட கதாநாயகனை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அவர் அதன் பின்னர் பல படங்களை இயக்கினாலும் எந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவர் அஜித்துக்காக எழுத்தாளர் பாலகுமாரனோடு இணைந்து ஒரு வரலாற்றுக் கதையை எழுதி வைத்திருந்தார். ஆனால் ஏனோ அந்த படம் அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லையாம்.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கிய ஷேர்ஷா திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் அடுத்து அவர் தெலுங்கில் உப்பேன்னா மூலம் கவனம் பெற்ற வைஷ்ணவ் தேஜ்ஜை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் அதர்வாவின் தம்பி நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.