திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (07:30 IST)

மறுபடியும் மொதல்ல இருந்தா… மீண்டும் ஷூட்டிங் செல்லும் தங்கலான் படக்குழு?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி (இன்று இரவு 7 மணிக்கு) தங்கலான் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 ஆம் தேதி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் ஐந்து நாட்கள் ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கேஜிஎஃப் பகுதிகளில் விக்ரம்மை வைத்து சண்டைக் காட்சி ஒன்றை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.