ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (16:00 IST)

வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட விக்ரம்!

chiyaan vikram2 - Copy
வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட விக்ரம்!
தனது வீட்டில் வேலைப்பார்க்கும் பெண்ணின் மகனின் திருமணத்தில் நடிகர் விக்ரம் கலந்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் வீட்டில் மேரி என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்
 
அவரது மகன் தீபக் என்பவருக்கும் வர்ஷினி என்பவருக்கும் நேற்று திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது 
 
இந்த திருமணத்தில் விக்ரம் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருடன் விக்ரமின் ரசிகர்களும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது