கடாரம்கொண்டான் படத்துக்குத் தடை? – மலேசிய அரசு அதிரடி !

Last Modified திங்கள், 22 ஜூலை 2019 (13:45 IST)
விக்ரம் நடிப்பில் வெளியானக் கடாரம்கொண்டான் படத்துக்கு மலேசியா அரசு தடைவிதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கிய 'கடாரம் கொண்டான்' திரைப்படம் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்தப்படத்தின் கதைக்களம் முழுவதும் மலேசியாவில் நடப்பது போல அமைக்கப்பட்டு இருந்தது.
 
படம் பார்த்த மலேசிய மக்கள் தங்கள் ஊரைத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் தவறாக சித்தரித்து காட்டுவதாகவும் அதில் இந்தப்படமும் விதிவிலக்கு இல்லை எனவும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து மலேசிய அரசு இந்தப்படத்தை தடை செய்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :