ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2023 (18:05 IST)

விஜய் இனிமேல் நடிக்க மாட்டார்.. மக்கள் இயக்க நிர்வாகி கொடுத்த அதிர்ச்சி தகவல்..!

தளபதி விஜய் இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த நிலையில் அரசியலுக்கு வந்துவிட்டால் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியதாக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று விஜய்யின் பனையூர் வீட்டில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்ததாகவும் அரசியலுக்கு வந்துவிட்டால் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் பேட்டி அளித்துள்ளார். 
 
இதிலிருந்து விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பது தெரியவந்துள்ளது. அது மட்டும் இன்றி வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 68 திரைப்படம் தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுவது விஜய் ரசிகர்களுக்கு ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும் அவர் அரசியலில் குதிக்க இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran