வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 மே 2024 (07:16 IST)

ரிலீஸுக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’… டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் சரத்குமார் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் மூத்த நடிகர் விஜயகாந்த் ஒரு சிறப்பு வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த முடிவை படக்குழு கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை யாரும் செல்லாத இடங்களான வட இந்தியாவின் டையு டாமன் ஆகிய பகுதிகளில் சென்று படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டே முழுவதுமாக படப்பிடிப்பை முடித்தனர். ஆனாலும் படத்தின் ரிலீஸில் தாமதம் ஆகிக் கொண்டே வந்தது. இந்நிலையில் இப்போது மே 29 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.