1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (17:44 IST)

ராஜராஜ சோழனை இந்து அரசனா மாத்திட்டாங்க: வெற்றிமாறன் பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம்!

Vetrimaran
ராஜராஜ சோழனை இந்து அரசனாக மாற்றிவிட்டார்கள் என்று இயக்குனர் வெற்றிமாறன் பேசியதற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
 
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மணி விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் சினிமா அரசியல் குறித்து பல கருத்துக்களை தெரிவித்தார் 
 
அப்போது அவர் திருவள்ளுவர் மற்றும் ராஜராஜ சோழனை இந்துக்களாக மாற்றி விட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தது பெரும்  சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது
 
சிவன் கோவிலை தஞ்சையை கட்டிய ராஜராஜ சோழன் இந்து அல்லாமல் கிறிஸ்தவரா? அல்லது முஸ்லிமா? என்று நெட்டிசன்கள் அவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
அதேபோல் பாஜக தலைவர் எச் ராஜா உள்பட பலரும் வெற்றிமாறனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்