திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (15:39 IST)

2020-ல் தெறிக்கவிட்ட கீர்த்தி சுரேஷ்: சக நடிகைகளை ஓரம் கட்டி நம்பர் 1 !!

தென் இந்தியாவில் எந்த நடிகைகளின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு அதிகப்படியான ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
2020 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் நுழைந்துள்ள நிலையில் இந்தியாவில் அதிகம் ட்ரெண்டான அதிகம் பேசப்பட்டவை குறித்த பட்டியலை ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தென்னிந்தியாவில் எந்த நடிகையின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு அதிகப்படியான ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
இந்த பட்டியலில் முதல் இடத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் முதல் இடம் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடத்தில் காஜல் அகர்வால், சமந்தா, ராஷ்மீகா, பூஜா ஹெக்டே, டாப்சி, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், ஸ்ருதி ஹாசன், த்ரிஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
 
இது மட்டும் இல்லாமல் Most Liked Tweet, Most Tweeted Birthday Tag ஆகிய பட்டியல்களிலும் கீர்த்தி சுரேஷ் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் டிவிட்டரில் #KeerthySuresh, #KEERTHYRuledTwitter2020 போன்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.