திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (15:22 IST)

லோகேஷ் பாப்புக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை – உதவிக் கேட்கும் நண்பன் குட்டி கோபி!

ஆதித்யா தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி வந்த லோகேஷ் பாப் சிகிச்சை செலவுக்காக அவரது நண்பர் குட்டி கோபி இணையதளத்தில் உதவி கேட்டுள்ளார்.

ஆதித்யா தொலைக்காட்சியில் மொக்க ஆஃப் த டே என்ற நிகழ்ச்சியை நடத்தி மக்களிடையே பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் லோகேஷ் பாப். அதன்  மூலம் அவருக்கு நானும் ரௌடிதான் படத்தில் வாய்ப்புக் கிடைக்க உடல் இயங்க முடியாத ஒரு ரௌடியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

இந்நிலையில் அவருக்கு சில மாதங்களுக்கு முன்னதாக பக்கவாதம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது நண்பரும் நடிகருமான, குட்டி கோபி சமூக வலைதளத்தில் அவரது சிகிச்சைக்கு 7 லட்ச ரூபாய் தேவை என சொல்லி உதவிக் கேட்டு இருந்தார். இந்நிலையில் பலரும் அவரது சிகிச்சைக்கு உதவி செய்யவே, அதன் மூலம் முதல் கட்ட அறுவை சிகிச்சை நடந்தது. நடிகர் விஜய் சேதுபதி லோகேஷை நேரில் சென்று சந்தித்து உதவி செய்தார்.

இந்நிலையில் லோகேஷ்க்கு இப்போது இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. இதற்காக 6 லட்ச ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால் மீண்டும் நண்பர்கள் உதவி செய்ய வேண்டும் என குட்டி கோபி சமூகவலைதள பக்கத்தில் உதவி கோரியுள்ளார். சிகிச்சை முடிந்ததும் அதற்கான ரசீதைக் கூட காண்பிக்கிறோம் என கோபி தெரிவித்துள்ளார்.