திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (20:53 IST)

சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணையும் திரிஷ்யம் பட இயக்குநர்!

cinema
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்  ஜீத்து ஜோசப்  இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மோகன் லால், மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம்.

இப்படம் ரூ.5 கோடியில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் வசூலும் குவித்தது.

இதையடுத்து, இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன் லால், மீனா நடிப்பில்  திரிஷ்யம் படத்தின் 2 வது பாகம் வெளியானது.  இப்படத்தை ஆசிர்வாத் சினிமாச் நிறுவனம் தயாரித்தது. இப்படமும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் லால் நடிக்கவுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.