பிக்பாஸ் லொஸ்லியா 96 ஜானுவா! - திரிஷாவின் ரியாக்ஷனை பாருங்கள்!

Last Updated: புதன், 31 ஜூலை 2019 (15:32 IST)
தமிழ் சினிமாவில் நடிகை த்ரிஷா கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த படங்ககளின் வரிசையில் 96 படமும் ஒன்று. 


 
அதில் உண்மை காதலை வெளிப்படுத்தி நடித்திருந்த த்ரிஷாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. அதிலும் குறிப்பாக அந்த யெல்லோ சுடிதார் படுபேமஸ் ஆகிவிட்டது.  படம் வெளியான புதிதில் எல்லா கடைகளிலும் சேல்ஸ் தூள் கிளப்பியது. மேலும் இதை அணிந்திருந்த பெண்களை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு மீம்ஸ்களை தெறிக்கவிட்டு கிண்டலடித்து வந்தனர். 


 
சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில்  96 படத்தின் ஜானு வேடத்தை லொஸ்லியாவுக்கு கொடுத்திருந்தனர். அந்த கெட்டப்பில் திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கட்டு கட்டு கீர கட்டு என்ற பாடலை போட உடனே லொஸ்லியா செம்ம குத்தாட்டம் ஒன்றை போட்டார்.  இந்நிலையில் தற்போது அந்த எபிசோடை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று திரிஷா கமெண்ட் செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :