செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 மே 2023 (11:18 IST)

தீபாவளி ரேஸில் இன்று மூன்று படங்கள் போட்டி… இந்த வருஷம் செம்ம எண்டர்டெயின்மெண்ட்தான்!

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் என்றால் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் படங்கள் அனைத்தும் ரிலீஸ் ஆகும். குறைந்தது 5 படங்களாவது அதில் வெற்றி படங்களாக அமையும். ஆனால் இப்போதெல்லாம் அதிக திரைகளில் ஒரே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் 2 க்கு மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆவதில்லை. அதுவும் விஜய், அஜித், ரஜினி மற்றும் கமல் படங்கள் ரிலீஸ் ஆனால் போட்டிக்கு படங்களே ரிலீஸ் ஆகாது என்ற சூழல்தான் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. சிவகார்த்திகேயனின் அயலான், கார்த்தியின் ஜப்பான் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிக்கும் ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள் தங்கள் ரிலீஸை அறிவித்துள்ளன. இதற்கிடையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் தீபாவளிக்கு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.