'தல 59' அஜித்துடன் மாஸ் காட்டப்போகும் இசையமைப்பாளர் இவர் தான்!

VM| Last Updated: திங்கள், 28 ஜனவரி 2019 (21:17 IST)
தல அஜித் நடித்த விஸ்வாசம் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான விஸ்வாசம் இன்றும் பல திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


 
இதனால் உற்சாகமாக உள்ள அஜித், அடுத்த படத்தை சூட்டோடு சூடாக உடனே கொண்டுவர விரும்புவதாக தெரிகிறது. மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இது தல அஜித்துக்கு 59வது படமாகும். இந்த படத்தை ஹெச் .வினோத் இயக்கப்போவது எல்லோருக்கும் தெரியும், இந்நிலையில் படத்தில் நடிக்க உள்ள திரை நட்சத்திரங்களின் பட்டியல் காலையில் வெளியானது. அதில் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரிய தாரியங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 
 
இந்நிலையில் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தல 59 படத்துக்கு இசையமைக்கப் போவது நம்ம யுவன் சங்கர் ராஜா என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பில்லாவில் அஜித்துடன் மாஸ் காட்டிய யுவன் இப்படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :