ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 ஏப்ரல் 2021 (17:44 IST)

இந்த தீர்ப்பு அரசியல் சம்மந்தப்பட்டது அல்ல… சரத்குமார் கருத்து!

ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார் கைது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இல்லை என்று சரத்குமாரே தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் காசோலை திரும்பிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 5 வழக்குகளில் சரத்குமார் மற்றும் ராதிகாவிற்கு ஒரு ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ரூ.5.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இது சம்மந்தமாக பேசியுள்ள சரத்குமார் ‘இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்றுதான் நினைத்தேன். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் வந்த தீர்ப்பில்லை. தனிப்பட்ட தொழில் சம்மந்தமான வழக்குதான். மேல் முறையீடு செய்ய உள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.