ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 13 ஜூலை 2017 (23:29 IST)

அதிசயம் ஆனால் உண்மை! ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யாவை மறந்த தமிழக அரசு!

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது 5 வருடங்களுக்கான சிறந்த திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன,



 
 
இதன்படி 2009ஆம் ஆண்டின் சிறந்த படமாக 'பசங்க' திரைப்படமும், 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக 'மைனா' திரைப்படமும், 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக 'வாகை சூட வா' திரைப்படமும், 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக 'வழக்கு எண் 18/9 திரைப்படமும், 2013ஆம் ஆண்டு சிறந்த திரைப்படமாக 'ராமானுஜன்' திரைப்படமும், '2014ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக 'குற்றம் கடிதல்' திரைப்படமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் படங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.