திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2020 (17:00 IST)

’’ஹிட் பட’’ பிரபல இயக்குநர் மகனுக்கே இந்த நிலைமையா ? வாய்ப்புகள் மறுப்பதாக டுவீட் !

தமிழ் சினிமாவிலும் வாரிசு அரசியல் உள்ளது என இயக்குநர் பாக்கியராஜின் மகன் சாந்தனு தெரிவித்தனர்.

பலிவுட் நடிகர் சுசாந்த் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிகுள்ளாக்கியது. அதன்பிறகு பாலிவுட்டில் வாரிசுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக பலரும் குற்றம் சாட்டினர்.

ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் தனக்கான வாய்ப்புகளை ஒரு கும்பல் பறிப்பாதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். நடிகை தமன்னா தனக்காக விருதுகள் வாரிசுகளுக்கு தரப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில், இங்கேயும் வாரிசு அரசியல் உள்ளது குழு அரசியல்தன்நம்முடன் யார் பணியாற்றவேண்டும் என்பது குறித்து முடிவு செய்கிறார்கள். அதில அவர்கள் மற்றவர்களை அனுமதிக்கவிட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

சாந்தனு பாக்யராஜின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.