சூர்யா 45, சூர்யா 46 இனிமேல் தான் ரிலீஸ்.. அதற்குள் சூர்யா 47 படப்பிடிப்பு தொடக்கம்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் அடுத்த படைப்பான 'சூர்யா 47' திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக பூஜையுடன் தொடங்கியது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ழகரம் ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.
பூஜை விழாவில் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஜித்து மாதவன், நடிகை நஸ்ரியா நசீம் 'பிரேமலு' புகழ் நஸ்லென், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம், நடிகர் ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் சூர்யா ஒரு காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜித்து மாதவனின் முந்தைய படங்கள் ஆக்ஷன் மற்றும் டார்க் காமெடி பாணியில் இருந்ததால், இது வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல், மாறுபட்ட கோணத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்துக்கான ப்ரோமோ ஷூட் இன்று தொடங்குகிறது என்றும், அதில் சூர்யாவின் காவல் அதிகாரி லுக் எப்படி இருக்கப் போகிறது என்ற ஆவல் ரசிகர்களிடையே எகிறியுள்ளது.
சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'சூர்யா 46' படத்தில் நடித்து வரும் நிலையில், 'சூர்யா 47' குறித்த இந்த அறிவிப்புகள் அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.
Edited by Siva