பிரபல இசையமைப்பாளரால் விஜய்சேதுபதிக்கு இப்படியொரு நிலைமை! கொதிக்கும் மாமனிதன் படக்குழு

VM| Last Updated: வெள்ளி, 1 மார்ச் 2019 (21:43 IST)
தமிழ் சினிமாவி தற்போதைக்கு முன்னணி வசூல் நாயகன் என்றால் கண்ணை மூடிக்கொண்டு விஜய் சேதுபதியை கைகாட்டலாம். பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு எல்லாமே ஹிட்டாகி வருகிறது. அப்படிப்பட்டவருக்கு  இப்படி ஒரு கசப்பான அனுபவமா என்று கோலிவுட்டில் பரபரப்பு ஏற்படுள்ளது.


 
“மாமனிதன்” படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த படத்தை சீனு இராமசாமி இயக்கியுள்ளார்.  விஜய் சேதுபதி   ஹீரோவாக நடித்துவந்தார் படம் கிட்டத்தட்ட முழுவதும் முடியும் நிலையில் உள்ளது.   இநிலையில்படம் தொடங்கியதில் இருந்து இயக்குனர் தொடங்கி நடிகர் நடிகை தொடங்கி படத்தில் வேலை செய்யும் கடைசி கட்ட ஊழியர்கள் வரை இதுவரை யாருக்கும் சம்பளம் தரவில்லையாம் 
 
யுவன் சங்கர் ராஜாவை நம்பி,  படக்குழுவினர் அனைவரும் உழைத்து வந்தனர் தற்போது படம் முடிந்து விட்ட நிலையில் சம்பளம் குறித்து யார் போன் பண்ணாலும் யுவன் எடுப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் ம் பிக்பாஸ் புகழ் ரைஸாவை வைத்து புதிய படம் ஒன்றை யுவன் தயாரிக்க உள்ளாராம். இதை கேள்விப்பட்ட “மாமனிதர்” படக்குழுவினர்  கொதித்து போய் உள்ளார்களாம்.


இதில் மேலும் படிக்கவும் :