திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (18:44 IST)

சிம்புவின் அடுத்த படத்திற்கு ‘தளபதி 65’ இசையமைப்பாளர்!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் தொடங்கி நடந்து வந்ததாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் விரைவில் சிம்புவும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் நடிகர் ஜெய் இசை அமைக்க இருப்பதாகவும் கற்பனை கதைகளை யூடியூபில் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் புரளியை கிளப்பி வந்தனர்
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது: அது குறித்து தற்போது பார்ப்போம்
 
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு
தயாரிப்பு: மாதவ் மீடியா
தயாரிப்பாளர்: பாலாஜி காப்பா
கதை, திரைக்கதை, இயக்கம் - சுசீந்திரன்
ஒளிப்பதிவாளர் - திரு
இசையமைப்பாளர் - எஸ்.எஸ்.தமன்
எடிட்டர் - ஆண்டனி
தயாரிப்பு வடிவமைப்பு - ராஜீவன்
பாடலாசிரியர் - யுக பாரதி
வசனங்கள் - பாலாஜி கேசவன்