ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது அவரது மகளா?

Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (15:52 IST)

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை சென்றுள்ள ரஜினி, இந்தியா திரும்பியதும் தனது அடுத்த படத்துக்கான முடிவை எடுக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

அவரின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் தேசிங் பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ் ஆகியவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்ற்ன. இந்நிலையில் இப்போது ரஜினியின் இளையமகள் சவுந்தர்யாவே ரஜினியை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் மேலும் படிக்கவும் :