திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 ஜூன் 2024 (08:10 IST)

மீண்டும் தொடங்கிய சிவகார்த்திகேயன் முருகதாஸ் பட ஷூட்டிங்!

கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் தற்போது சென்னையின் சில பகுதிகளில் நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை இடைவெளியே இன்றி நடத்தி வருகிறார் முருகதாஸ். படத்தில் வில்லனாக நடிக்க வித்யுத் ஜமால் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மற்றொரு முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பிஜு மேனன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார், இவர் ஏற்கனவே தமிழில் தம்பி, போர்க்களம் மற்றும் அரசாங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழில் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார். 

இந்த படத்தின் ஷூட்டிங்குக்கு பிரேக் விடப்பட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தமுறை தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.