திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (23:43 IST)

''மாநாடு'' பட ரீமேக் உரிமையைப் பெற்ற சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்

2021 ஆம் ஆண்டு வெளியான படங்களில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் மா நாடு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தை வி ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளார்  சுரேஷ் தயாரித்திருந்தார்.

டைம் லூப் பாணியில் அமைந்துள்ள இப்படம் வசூலில் சாதனை படைத்ததுடன் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், மாநாடு படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் அனைத்து மொழி ரீமேக் உரிமையை  நடிகர் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் பெற்றுள்ளார்.

சிவகாத்திகேயன் நடிப்பில் தமிழ் – தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் #எஸ்-20 படத்தை தயாரிப்பது சுரேஷ் புரொடெக்சன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.