1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified வியாழன், 29 செப்டம்பர் 2022 (18:16 IST)

பிரின்ஸ் இசை வெளியீட்டு விழா இந்த தேதியிலா? சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி!

prince
சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சிவகார்த்திகேயன் ஜோடியாக மரியாநடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது/ இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது.
 
Edited by Siva