என் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.. யேசுதாஸ் மகன் மறுப்பு..!
பிரபல பாடகர் யேசுதாஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த செய்திக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இன்று காலை முதல் பல ஊடகங்களில் இந்த தகவல் பரவிய நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்த விஜய் யேசுதாஸ் தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.
யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், தற்போது அவரது மகன் அளித்த விளக்கத்தால் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran