இளம் பாடகிக்கு செல்போனில் பாலியல் தொல்லை!

Last Modified புதன், 26 மே 2021 (16:40 IST)

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகியாக இருக்கும் மது பிரியாவுக்கு பலரும் பாலியல் தொல்லைகளைக் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு சினிமா உலகில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பவர் மது பிரியா. இவர் சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கி வந்தவர். அப்போதே அவரது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பலரும் ஆபாசமானக் கருத்துகளை வாந்தி எடுத்து வந்தனர். இந்நிலையில் இப்போது அவரின் செல்போன் எண்ணைக் கண்டறிந்த சிலர் அவருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியான அவர் சைபர் க்ரைம் போலிஸில் புகாரளித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :