ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2024 (21:49 IST)

ஐஸ்வர்யா ரஜினிக்கு கண்டிஷன் போட்ட சித்தார்த்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிப்பதற்கு முன்  அவரிடம் நடிகர் சித்தார்த் ஒரு கண்டிசன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
 
இந்த நிலையில், சமீபத்தில் சித்தா படத்திற்கு கிடைத்த வரவேற்பு மூலம் மீண்டும் பிஸியாகியுள்ள நடிகர் சித்தார்தின் அடுத்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. எனவே ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர் கதைத்தேர்வு மற்றும் ஸ்கிரிப்ட் படித்து அதன் பின்னர் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.
 
இந்த நிலையில், ஐஸ்வர்யா, நடிகர் சித்தார்தை அணுகி கதையைக் கூறியுள்ளார். இதைக் கேட்ட சித்தார்த் தனக்கு பவுண்ட்டட் ஸ்கிரிட்ப்  கொடுக்கும்படி, அதைப் படித்துப் பார்த்து அதன் பின்னர் தன் முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளாராம்.
aiswarya rajini
ஐஸ்வர்யா இப்புதிய படத்திற்கான பவுண்டர் ஸ்கிரிடைக் கொடுக்கும் பட்சத்தில், இதைப்படித்து பார்த்து தனக்குப் பிடித்திருந்தால் தான் சித்தார்த்த் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என கூறப்படுகிறது.
 
லால் சலாம் படத்தோல்வியில் இருந்து மீண்டு தன்னை மீண்டும் நிரூபித்து, அடுத்த படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முடிவெடித்துள்ளதாக கூறப்படுகிறது.