ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (12:52 IST)

தன் முதல்பட தயாரிப்பாளரை சந்தித்து ஆசிரவாதம் பெற்ற ஷங்க! வைரல் புகைப்படம்!

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோனை சந்தித்து தனது மகளின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அழைத்துள்ளார்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1993ல் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இது ஷங்கரின் முதல் படமாகும். மதுபாலா, சுபஸ்ரீ, செந்தில், கவுண்டமனி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்த படம் அப்போதைய காலத்திலேயே பெரும் வெற்றி பெற்றது. புதுமுக இயக்குனர் ஷங்கரை நம்பி அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்தார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

அதுமட்டுமில்லாமல் அவர் அதன் பிறகு தயாரித்த எல்லா படங்களுமே அதிக பட்ஜெட் படங்கள்தான். ஒரு கட்டத்தில் தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த கோடீஸ்வரன் என்ற பெயரில் இமாலய பட்ஜெட்டில் ஒரு படத்தை உருவாக்கி, அது பாதியிலேயே நின்றதால் மிகப்பெரிய இழப்புக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் ஷங்கருடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்த குஞ்சுமோனுக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை.

இப்போது ஜெண்டில்மேன் 2 படத்தை மீண்டும் அவர் தொடங்குகிறார். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தற்போது கே டி குஞ்சுமோனை சந்தித்து தனது மகளின் திருமண வரவேற்புக்கு அழைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது குஞ்சுமோன் ஷங்கரையும் அவரின் மனைவியையும் ஆசிர்வாதம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.