தொடர்ச்சியா ரெண்டுமுறை பார்த்தேன் - ராஜமௌலி சிலாகித்த படம்


Sasikala| Last Modified வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (18:20 IST)
ராஜமௌலியின் படங்களைப் பார்க்க ஆந்திரா, தெலுங்கானா ஆவலாக உள்ளது. பாகுபலி இரண்டாம் பாகத்தை பொறுத்தவரை இந்தியாவே ஆவல் கொண்டுள்ளது.

 


அப்படிப்பட்டவர், ஒரு படத்தை வெளியான அன்றே இரண்டுமுறை பார்த்து, பாராட்டியிருக்கிறார் என்றால்...? அந்தப் படம், ஜனதா கேரேஜ்.
 
ஜுனியர் என்டிஆர், மோகன்லால் நடிப்பில் நேற்று ஜனதா கேரேஜ் வெளியானது. படத்தைப் பார்த்த ராஜமௌலி மோகன்லால், ஜுனியர் என்டிஆர் இருவரது நடிப்பையும் ட்விட்டரில் புகழ்ந்துள்ளார். அத்துடன் பேக் டு பேக் இரண்டுமுறை படத்தைப் பார்த்து ரசித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
 
ராஜமௌலியின் இந்த ட்வீட் ஜனதா கேரேஜுக்கு பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :