சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு இதுதான் உண்மையான காரணமா?

Last Modified செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (08:22 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கல்லூரி காலத்தில் நடந்த விஷயத்தை கூறியதை யாரும் நியாயப்படுத்த விரும்பவில்லை. இருப்பினும் சரவணன் கூறியது தவறாக இருந்தாலும் கூறிய உடனே ஓரிரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்காமல் இரண்டு வாரங்கள் கழித்து நடவடிக்கை எடுத்திருப்பது சந்தேகத்தை வரவழைக்கிறது
சமூக வலைதளங்களில் சரவணன் கூறியது கடும் பிரச்சினைக்குரிய ஒரு விஷயமாக ஆகிய போதிலும் அவர் இந்த விஷயத்தைக் கூறிய போது கமல்ஹாசன் உள்பட பார்வையாளர் பலர் ஜாலியாக சிரித்து ரசிக்க தான் செய்தனர். சரவணன் கூறியது தவறு என அவர் மீது யாரும் குற்றம் சாட்டவில்லை

மேலும் சரவணன் கூறியது உண்மையிலேயே தவறாக இருந்தபோதிலும் அவர் மன்னிப்புக் கேட்ட பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுத்தது சரியா? என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு உண்மையான காரணம் இது தானா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து சமூக வலைதள பயனாளர்கள் விவாதம் செய்து வருகின்றார்கள். அதில் குறிப்பாக பலர் குறிப்பிடும் ஒரு விஷயம் என்னவெனில் கடந்த சனிக்கிழமை அன்று கமலஹாசன் பேசும் போது இடையில் குறுக்கிட்ட சரவணன், 'இவன் கோர்த்து விட்றான்' என்று கூறுவது போல வருகிறது. இதனை பெரிதாக யாரும் கவனிக்க வில்லை என்றாலும் கமல் நிச்சயம் கவனித்திருப்பார். அவர் இதுகுறித்து பிக்பாஸ் குழுவினர்களிடம் தனது அதிருப்தியை தெரிவித்து இருப்பார் என்றும் அதனால்தான் சரவணன் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை எனினும் பெண்களை கண்ணியக்குறைவாக கூறியதால்தான் சரவணன் வெளியேற்றப் பட்டார் என்பதை உண்மையிலேயே நம்ப முடியவில்லை என்பதுதான் உண்மை என தெரிகிறது


இதில் மேலும் படிக்கவும் :