வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகர் சரத்குமார்!

Last Modified செவ்வாய், 6 ஜூலை 2021 (10:43 IST)

நடிகர் சரத்குமார் முதல் முதலாக இரை என்ற வெப் சீரிஸின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார்.

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் கதாநாயக வாய்ப்புகள் கிடைக்காததால் குணச்சித்திர வேடங்களுக்கு தாவினார். இப்போது தெலுங்கில் முக்கிய நடிகராக உருவாகியுள்ளார். இந்நிலையில் இப்போது முதல் முதலாக அவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இந்த தொடரை அவரின் மனைவி ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா நிறுவனம் தயாரிக்க, தூங்காவனம் மற்றும் கடாரம் கொண்டான் ஆகிய படங்களின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :