ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (10:52 IST)

சர்வதேச விருதைப் பெறும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்!

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். இவர் தமிழில் ரோஜா, இருவர், பம்பாய், துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். பாலிவுட்டிலும் மிக முக்கியமானப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல் தமிழ், மலையாளம் மற்றும் இந்தியில் சில படங்களையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய மற்றும் ஒளிப்பதிவு செய்த படங்களுக்காக பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச அளவில் ஒளிப்பதிவு துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தமைக்காக அவரின் பிரான்ஸின் பியர்ரி அஞ்சனியூஸ் என்ற விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனாகும். இந்த விருதை அவர் மே மாதம் 24 அம் தேதி நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெற்றுக் கொள்ள உள்ளார்.