ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 மே 2020 (17:12 IST)

ரசிகர்களுக்கு டிரிப்பிள் விருந்து கொடுக்கும் சந்தானம்!

ரசிகர்களுக்கு டிரிப்பிள் விருந்து கொடுக்கும் சந்தானம்!
சந்தானம், அஹானா, ஹர்பஜன்சிங் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் திரைப்படம் ’டிக்கிலோனா’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனை படக்குழுவினர் தற்போது தொடங்க திட்டமிட்டுள்ளனர். இன்று முதல் 3 நாட்கள் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளி வர இருப்பதாகவும் சந்தானம் தனது ரசிகர்களுக்கு மூன்று நாட்களில் டிரிப்பிள் விருந்து கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதால் இந்த மூன்று கெட்டப்புகள் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக வெளிவர உள்ளதாக சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார். இதனை அடுத்து முதல் லுக் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த லுக் தற்போது வைரலாகி வருகிறது
 
கடந்த சில நாட்களாகவே தமிழ் திரைப்படங்களின் புரோமோஷனல் தொடங்கியதை அடுத்து தற்போது சந்தானம் படத்தின் புரமோஷனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது