புதன், 6 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (09:44 IST)

பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவில் ஓடுவதில்லை…. சல்மான் கானுக்கு யாஷ் பதில்!

சல்மான் கான் தெரிவித்த கருத்து கேஜிஎப் ஹீரோ யாஷ் பதிலளித்துள்ளார்.

சமீபகாலமாக பாகுபலி, கேஜிஎப், புஷ்பா மற்றும் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்கள் பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று ஹிட்டாகின. இதையடுத்து வரிசையாக தென்னிந்திய படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன.

இதுபற்றி பேசிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான் ‘தென்னிந்திய படங்கள் இங்கு ஓடுகின்றன. ஆனால் பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவில் ஓடுவதில்லை’ என வருத்தம் தெரிவித்திருந்தார்.  அதற்கு யாஷ் அளித்துள்ள பதிலில் ‘இதை அப்படி பார்க்க வேண்டியதில்லை. எங்கள் படங்களும் வரவேற்பைப் பெறவில்லை. எங்கள் பாணி சினிமாவை மக்கள் அறிந்துள்ளனர். ராஜமௌலியின் பாகுபலி படம் இதை ஆரம்பித்தது. பின்னர் கேஜிஎப் உள்ளிட்ட படங்கள் அதை தொடர்ந்து வருகின்றன. பாலிவுட் படங்கள் தென்னிந்திய மக்களையும் தொடர்புபடுத்தும் விதமாக உருவானால் அவை இங்கும் வெற்றி பெறும்’ எனக் கூறியுள்ளார்.