இன்று முதல் மீண்டும் களமிறங்கும் ஆர்ஜே பாலாஜி!

rj balaji
இன்று முதல் மீண்டும் களமிறங்கும் ஆர்ஜே பாலாஜி!
siva| Last Modified வியாழன், 29 அக்டோபர் 2020 (18:10 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த பணிகள் காரணமாக ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து கொண்டிருந்த ஆர்ஜே பாலாஜி திடீரென சென்னை திரும்பினார் என்பது தெரிந்ததே

அதன் பின்னர் ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தீபாவளி அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் புரமோஷன் பணிகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தின் வியாபார பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் மீண்டும் அவர் இன்று முதல் ஐபிஎல் போட்டியின் வர்ணனையாளர் பணிக்கு சென்று உள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன்னரே அவர் மும்பை சென்று இருந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்துதல் காலத்தில் இருந்ததாகவும், நேற்று தான் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்ததால் இன்று முதல் அவர் வர்ணனை செய்ய உள்ளதாகவும் தெரிகிறது

இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியை தான் வர்ணனை செய்வதாக நடிகர் பாலாஜி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டியில் பாலாஜியின் ஜாலியான வர்ணனையை கிரிக்கெட் ரசிகர்கள் ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :