திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (08:21 IST)

நான் உன் அம்மாவைக் கடத்தி வந்து திருமணம் செய்துகொண்டேன் – மகனிடமே பகிர்ந்துகொண்ட நடிகர்!

நடிகர் ரியாஸ்கான் ஒரு இணையதள சேனலுக்கு அளித்த பேட்டியில் தன் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் ரியாஸ்கான் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர். அவரின் மனைவியான உமா ரியாஸ் முன்னாள் தமிழ் சினிமா நடிகை கமலா காமேஷின் மகள். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரியாஸ்கானும், உமாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தன் மகன் ஷாரிக்குடன் இணையதள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரியாஸ் கான், தன் திருமணத்தின் போது ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் ‘எங்கள் திருமணம் கலப்பு திருமணம் என்பதால் இரண்டு பேர் வீட்டிலும் மன வருத்தம் இருந்தது. அதனால் உமாவ கடத்திட்டு வந்துதான் நான் திருமணம் செய்துகொண்டென். அதற்கு பிறகு ஷாரிக் பிறந்த பிறகுதான், இரண்டு குடும்பங்களும் மீண்டும் சேர்ந்தது. அதனால் ஷாரிக்கை எல்லோரும் செல்லமாக வளர்த்தோம். ’ எனக் கூறினார்.