ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (08:26 IST)

சின்னத்திரை நடிகர் லோகேஷின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?

தமிழில் 90களில் மிக பிரபலமாக இருந்து வந்த தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று மர்ம தேசம். இந்த தொடரில் வெளியான விடாது கருப்பு என்ற சீரியலில் நடித்தவர் லோகேஷ். மேலும் தமிழில் பிரபலமான மற்றொரு குழந்தைகள் சீரியலான ஜீ பூம் பாவிலும் லோகேஷ் நடித்துள்ளார். தற்போது வளர்ந்து விட்ட லோகேஷ் தமிழில் வெளியான 6 அத்தியாயங்கள் என்ற ஆந்தாலஜியில் ஒரு எபிசோடை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் லோகேஷ் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லோகேஷின் தற்கொலைக்கான பின்னணி குறித்து சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு லோகேஷ் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரும் மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் லோகேஷ் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் மரணம் குறித்து அவரது தந்தையும் போலிஸார் குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டதாக தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.