மும்பை மாணவர்களுக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்! ஷாக்காகி மாணவர்கள் செய்த வேலை - வைரல் வீடியோ!

Last Updated: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (20:04 IST)
நடிகர் ரஜினிகாந்த் மும்பை தனியார் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் மெகா வைரலாகி வருகிறது. 


 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166வது படமாக உருவாகவிருக்கிறது. அண்மையில்  இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 
 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் படுமும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் மும்பையில் உள்ள  தனியார் கல்லூரி விழா ஒன்றில் மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் கல்லூரி விழாவிற்கு அழைக்கப்பட்ட அவர், கல்லுரி திடீரென விசிட் அடித்தார். ஆனால் இவரது வருகையை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள் ரஜினியை பார்த்து ஒரு நிமிடம் ஷாக்காகி பின்னர்  தலைவா, சூப்பர் ஸ்டார் என்று கத்தி கரகோஷத்துடன்  கூச்சலிட்டனர். 
 
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மெகா வைரலாகி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :