ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2022 (18:14 IST)

''பீஸ்ட் ''பட இயக்குநருக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி ரசிகர்கள்

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் திரைபிரபலங்கள் பலரும் பார்த்து வருகின்றனர்.

இன்று வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு திரையரங்குகளில் குவிந்தனர். திரை அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் கொண்டாட்டங்கள் நடந்து சிறப்புக் காட்சிகள் தொடங்கின. பெரும்பாலான ஊர்களில் சிறப்புக் காட்சிகள் முடிந்து ரசிகர்களின் கருத்துகள் சமூகவலைதளங்களில் வெளியாக ஆரம்பித்துவிட்டன.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம்   கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.

கோலமாவு கோகிலா,  டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் – விஜய் இணைந்துள்ள  பீஸ்ட் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் இதுகுறித்து எதிர்மறையாக கருத்து பதிவிட்டுள்ளனர்.       

அதில், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்துப் படம் இயக்கவுள்ள நெல்சன் கதை மற்றும் வசனத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூற்யுள்ளனர்.

ரஜினி ரசிகர்களின் பதிவுகள் தற்போது இணையதளத்தில் பரவலாகி  வருகிறது.       

மேலும், ரஜினியின்  169 வது படத்திற்கு பீஸ்ட் படம் போன்று கவலையாக விமர்சனம்  கிடைக்ககூடாது என ரஜினி ரசிகர்கள் இப்போதே இயக்குனர் நெல்சனுக்கு தெரிவித்துள்ளனர்.