ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2024 (13:07 IST)

வேட்டையன் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது?... அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் ஒரே மாதமே உள்ள நிலையில் இன்னும் படப் ப்ரமோஷன்கள் தொடங்கவில்லை.

இந்நிலையில் இப்போது படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் வெளியாகும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. இந்த பாடலை அனிருத் இசையில் சூப்பர் சுப்பு எழுத, அனிருத்தே பாடியுள்ளார்.