1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (13:59 IST)

திருமணம் ஆகி இரண்டே நாளில் கணவர் கொடுத்த செம சர்ப்ரைஸ் - ஆடிப்போன நக்ஷத்திரா!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் நக்ஷத்திரா. பல சீரியல்களில் நடித்துள்ள இவர் குறும்படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். இந்நிலையில் தற்ப்போது சரஸ்வதியும் தமிழும் என்கிற சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 
 
இதனிடையே நக்ஷத்திராவுக்கு நீண்ட நாள் காதலன் ராகவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது திருமணத்திற்காக காத்திருக்கும் அம்மணி அவ்வவ்போது fiancee உடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். 
அண்மையில் இவர்களது திருமணம் பிராமண முறைப்படி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்ற நக்ஷத்திராவுக்கு அவரது கணவர் ராகவ் செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். நக்ஷத்திராவின் அம்மா, அப்பா மற்றும் சொந்தங்களை அவருக்கே தெரியாமல் வீட்டிற்கு வரவைத்து மகிழ்ச்சியான சர்ப்ரைஸ் கொடுத்து மனைவியின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார்.