திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 24 பிப்ரவரி 2020 (09:06 IST)

மாஃபியா படம் பார்த்து சலித்துக் கொண்ட ரசிகர் – பிரசன்னாவின் பாசிட்டிவ் அப்ரோச் !

நடிகர் பிரசன்னா

மாபியா படம் நன்றாக இல்லை என சொன்ன ரசிகருக்கு நடிகர் பிரசன்னா டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் கடந்த 21 ஆம் தேதி வெளியான மாபியா திரைப்படம் ஆரம்பம் முதலே நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதற்குக் காரணமாக சொல்லப்படுவது குறும்படம் எடுக்க வேண்டிய அளவுக்குக் கதையை கார்த்திக் நரேன் படமாக எடுத்து அதை மறைக்க தேவையில்லாமல் ஸ்லோ மோஷன் ஷாட்டுகளைப் போட்டு ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதே என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்து கடுப்பான ரசிகர் ஒருவர் படம் நன்றாக இல்லை என சொல்ல அதற்கு பிரசன்னா பதிலளித்துள்ளார். அவரது டிவிட்டுக்கு பதிலளித்த பிரசன்னா ‘எல்லா படங்களுக்கும் பிடித்தவர்களும் இருப்பார்கள்; பிடிக்காதவர்களும் இருப்பார்கள். ஆனால் உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.