செவ்வாய், 11 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (10:00 IST)

கும்கி இரண்டாம் பாகத்தை அறிவித்த பிரபு சாலமன்…!

கும்கி இரண்டாம் பாகத்தை அறிவித்த பிரபு சாலமன்…!
இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்து அவரை புகழ் வெளிச்சத்தில் இருந்து மறைய வைத்தன. கடைசியாக அவர் இயக்கிய செம்பி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் தன்னுடைய ஹிட் படமான கும்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் யானைகளைப் பற்றிய படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்தபடத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கும்கி இரண்டாம் பாகத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். யானை ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு ’கும்கி 2’ ஆம் பாகம் எனத் தெரிவித்துள்ளார். வழக்கமாக பிரபு சாலமனின் படங்களுக்கு இமான்தான் இசையமைப்பார். ஆனால் தற்போது நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். நடிகர், நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என தெரியாகிறது.